--- --:--:-- --

இணையதளம் சார்ந்த மோசடிகளை தடுக்க மத்திய அரசு புதிய திட்டம்..!

1

ணையம் சார்ந்த மோசடிகளை தடுக்கும் விதமாக அதில் தொடர்புடைய செல்போன்களை முடக்குவது, வங்கி கணக்குகளை முடக்குவது போன்ற நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

 

இணையதளம் சார்ந்த குற்றங்கள் அதிகரிப்பு வரும் நிலையில் அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரிசர்வ் வங்கி தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தேசிய பணப்பட்டுவாடா ஆணையம் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் உடன் மத்திய நிதி சேவைகள் துறை செயலாளர் விவேக் ஜோஷி ஆலோசனை நடத்தினார்.

 

இதில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகளும் உடன் இருந்தனர். இதில் பேசிய விவேக் ஜோஷி இணையதளம் சார்ந்த குற்றங்களில் தொடர்புடைய 70 லட்சம் செல்போன் எண்கள் முடக்கப்பட்டதாக தெரிவித்தார்.

 

இதன் தொடர்ச்சியாக குற்றத்திற்கு பயன்படுத்தப்படும் செல்போன்களின் எண்னை முடக்குவது குறித்து பேசப்பட்டது. மேலும் மோசடிகளுக்காக பயன்படுத்தப்படும் வங்கி கணக்குகளை முடக்கவும் ஆலோசிக்கப்பட்டது.

 

Right Menu Icon