அனைத்து சாதியினரும் அர்ச்சகர்.. வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்..!
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் பயின்றவர்களை பயிற்சி அர்ச்சகர்களாக நியமனம் செய்ய தடை விதிக்க கோரிய வழக்கை உயர் நீதிமன்ற கிளை முடித்து வைத்துள்ளது.
திருச்செந்தூரை சேர்ந்த வீரபாபு மற்றும் சுப்பிரமணி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கலையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தில் கீழ் பயிற்சி முடித்தவர்களை மூத்த அர்ச்சகர்களின் கீழ் பயிற்சி அர்ச்சகர்களாக நியமனம் செய்ய அரசாணை வெளியிட்டிருப்பதாகவும் அதை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்று கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.






