ஆங்கிலத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் கைவிரலை உடைத்த ஆசிரியர்..!
ஆங்கில பாடத்தில் குறைவான மதிப்பெண் வாங்கிய அரசு பள்ளி மாணவியை ஆசிரியர் தாக்கியதில் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் விஜயமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கொடியூரை சேர்ந்த சிறுமி எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். அண்மையில் நடைபெற்ற தேர்வில் ஆங்கில பாடத்தில் மாணவி குறைவான மதிப்பெண் பெற்றதாக கூறப்படுகிறது.
இதனால் மாணவியை ஆசிரியர் பிரம்பால் தாக்கியதாக கூறப்படும் நிலையில் மாணவியின் கட்டைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதில் தொடர்ந்து மாணவி மருத்துவமனை நடவடிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





