ஆபத்தை உணராமல் புதுச்சேரி கடலில் குளிக்கும் இளைஞர்கள்..!
புதுச்சேரியில் கடல் சீற்றம் அதிகம் வைத்துள்ள நிலையில் இளைஞர்கள் ஆபத்தை உணராமல் கடலில் குளித்து வருகின்றனர். புதுச்சேரியில் மிதமான மழை பெய்து வருகிறது.
அதன் காரணமாக கடல் சீற்றம் காணப்படுவதால் கடற்கரை சாலை பகுதியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காவல்துறையினரின் அறிவுறுத்தல்களை உணராமல் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் பயணிகள் ஆபத்தை உணராமல் ஆனந்தமாக குளித்து செல்பி எடுத்து வருகின்றனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் கடற்கரை சாலையில் இருந்தவர்களை அப்புறப்படுத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





