துணி கடையில் ஆடையுடன் பணத்தையும் திருடி சென்ற இளைஞர்..!
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் துணிக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த திருடன் தனக்கு பொருத்தமான ஆடைகளை தேர்வு செய்து திருடி அள்ளிச் சென்றான். ரவிச்சந்திரன் என்பவரது துணி கடையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காலையில் கடையை திறந்த திறக்க சென்ற பொழுது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே கல்லாவில் இருந்த ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் பணம் அபகரிக்கப்பட்டிருந்தது. சிசிடிவி காட்சி பதிவுகளை பார்த்த பொழுது ஒரு இளைஞர் கல்லாவை உடைக்கும் காட்சிகள் இருந்தன.
மேலும் அருகில் வைக்கப்பட்டுள்ள புத்தாடைகளில் இருந்து தனக்கு பொருத்தமான ஆடையை பார்த்து பார்த்து தேர்வு செய்யும் காட்சிகளும் பதிவாகியிருந்தன. இது பற்றிய புகாரின் பேரில் அவரை போடிநாயக்கனூர் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.






