--- --:--:-- --

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவல் உதவி ஆய்வாளர் போக்சோ சட்டத்தில் கைது..!

2

ர்மபுரி அருகே புகார் அளிக்க சென்று சிறுமியை விரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

 

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பழனிசாமிக்கும் அருகிலுள்ள 17 வயது சிறுமிக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு சட்ட விதிமுறையை மீறி குழந்தை திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் மாமியாருடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக காவல் நிலையத்தில் சிறுமி புகார் அளித்துள்ளார்.

 

அப்பொழுது அவரது செல்போன் எண்ணை வாங்கிக் கொண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சகாதேவன் விசாரணைக்காக வரச்சொல்லி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கிடையே கணவர் கொடுமைப்படுத்தவதாக சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் அவர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

 

அங்கிருந்து குழந்தைகள் நல உறுப்பினரிடம் காவல் அதிகாரி சகாதேவன் பலமுறை தம்மை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி தெரிவித்தார்.

 

இதை தொடர்ந்து பெண்ணாகரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சகாதேவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரை மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.

 

Right Menu Icon