கோடிக்கணக்கில் பேரம் பேசும் மத்திய அமைச்சர் மகனின் வீடியோ..!
மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகன் தேவேந்திர பிரதாப் சிங் தோமர் கோடிக்கணக்கான பரிவர்த்தனை தொடர்பாக பேசும் வீடியோ வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் தேவேந்திர பிரதாப் சிங் தோமர் கோடிக்கணக்கான பரிவர்த்தனை குறித்து விவாதிக்கும் மற்றொரு வீடியோ வெளியாகி சாட்சி ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள அணியின் தலைவர் சுப்ரியா அமைச்சரின் மகன் 500 கோடி ரூபாயில் ஆன பரிவர்த்தனை குறித்து பேசி உள்ளார் என்றும் அமலாக்கத்துறையில் வருமானவரித்துறை மத்திய புலனாய்வுத் துறை அதனை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





