சோதனை சாவடியில் நுழைய முயன்ற காட்டெருமை..!
சோதனை சாவடியில் நுழைய முயன்ற காட்டெருமையால் பல ஊழியர்கள் அச்சத்தில் உறைந்தனர். கல்லட்டி மழை பாதை வழியாக முதுமலை புலிகள் காப்பகம் அண்டை மாநிலமான மைசூர் பகுதிக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது.
இங்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவில் சோதனை சாவடிகள் மூடப்பட்டு வன ஊழியர்கள் தங்களது அறையில் தங்கி இருப்பது வழக்கம்.
இந்த நிலையில் இரவில் உலா வந்த காட்டெருமை ஒன்று சோதனை சாவடி கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்டது. அப்பொழுது ஊழியர்கள் சப்தம் எழுப்பியதால் காட்டெருமை அங்கிருந்து ஓடியது. இதன் காட்சி தற்பொழுது வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





