பெண் பத்திரிகையாளர் தோளில் கை வைத்த பிரபல நடிகருக்கு போலீஸ் சம்மன்..!
பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி மீது பெண் பத்திரிக்கையாளர் அளித்த புகாரில் சுரேஷ் கோபி வரும் 18ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
மலையாள திரை உலகில் முன்னணி நடிகர்களை ஒருவரான சுரேஷ் கோபி தமிழ் உள்ளிட்ட பல்வேறு தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அண்மையில் சுரேஷ்கோபி நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின்போது பெண் பத்திரிக்கையாளர் ஒருவரின் தோளில் சுரேஷ்கோபி கை வைத்து சர்ச்சை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் பத்திரிக்கையாளர் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த வழக்கில் நடிகர் சுரேஷ் கோபி வரும் 18ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.





