--- --:--:-- --

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. கழிவறையில் இருந்த அதிர்ச்சி பார்சல்..!

6

வங்கதேச தலைநகரம் தாக்கியாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தின் கழிவறையில் இருந்து ஒரு கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டது.

 

இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. தேச தலைநகரில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேற்றிரவு வந்தது. இந்த உள்நாட்டு விமானம் ஆக மாற்றப்பட்டு கேரளா கொச்சிக்கு புறப்பட்டு செல்ல இருந்தது.

 

விமானத்தின் கழிவறையை சுத்தம் செய்யும் பணி நடைபெற்ற பொழுது கழிவறையில் ஒரு பார்சல் இருந்ததை பார்த்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்று அதிகாரிகள் பார்சலை கைப்பற்றி பிரித்து பார்த்த பொழுது அதில் ஆறு தங்கக் கட்டிகள் இருந்தது தெரிய வந்தது.

 

தங்க கட்டிகளை ஆய்வு செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தங்க கட்டிகளுக்கு மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் இருக்கும் என்று தெரிவித்தனர். அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா மற்றும் விமான நிலைய கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon