திடீர் காய்ச்சலால் உயிரிழந்த 8ம் வகுப்பு மாணவி..!
காரைக்குடியில் 8ம் வகுப்பு மாணவி காய்ச்சல் காரணமாக உயிர் இழந்தார். சிவகங்கை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பாண்டி என்பவரது மகள் மேகலா. அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மேகலாவுக்கு காய்ச்சல் வந்ததையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பிறகு வீடு திரும்பினார். எனினும் நேற்று மேகலா என்பவருக்கு மீண்டும் காய்ச்சல் வந்ததோடு தொடர்ந்து வாந்தியும் வந்துள்ளது.
இதனை எடுத்து காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு மேகலா உயிரிழந்தார். மாணவிக்கு என்ன மாதிரியான நோய் தாக்கம் ஏற்பட்டது என கண்டறியும் முன்னரே அவர் உயிரிழந்தார்.
ஆய்வின் முடிவுக்கு பின்னரே மாணவியின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





