--- --:--:-- --

காதல் திருமணம் செய்த 3 நாளில் தம்பதி வெட்டி கொலை..!

3

தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து 3 நாட்களே ஆன நிலையில் தம்பதியர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியில் இருந்த மாரி செல்வம் அங்குள்ள ஷிப்பிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

 

திருவேற்காடு நகரை சேர்ந்த கார்த்திகாவை காதலித்து வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தன்று மாலை கார்த்திகாவின் உறவினர்கள் மாரி செல்வத்திடம் தகராறு செய்திருக்கிறார்கள்.

 

இந்நிலையில் தம்பதியர் வசித்து வந்த வீட்டிற்கு சென்றவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

 

தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon