ஒரே ஒரு ரூபாய்க்கு சட்டை.. படையெடுத்த மக்கள் கூட்டம்..!
சீர்காழி அருகே துணிக்கடை திறப்பு விழாவில் ஒரு ரூபாய்க்கு சட்டை வாங்க ஏராளமான இளைஞர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கரும்பு குளம் கடை வீதியில் புதிய துணி கடை ஒன்று திறப்பு விழாவை முன்னிட்டு ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை வழங்குவதாக விளம்பரம் செய்துள்ளனர்.
அதனை பார்த்த பூம்புகார், மேலையூர், வானகிரி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு துணிக்கடை முன்பாக குவிந்தனர். சிறப்பு சலுகையில் துணி வாங்க வாடிக்கையாளர்கள் கூடியதால் தள்ளுபடி ஏற்பட்டதால் தருமபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





