--- --:--:-- --

இருசக்கர வாகனங்களை திருடிய இளைஞர்களுக்கு சிறை..!

8

சீர்காழி அருகே தொடர்ந்து இருசக்கர வாகனங்களை திருடி வந்த இரண்டு இளைஞர்களை கிராம மக்கள் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

அரியலூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர்கள் இளைஞர்கள் அபினேஷ் மற்றும் விஜய் இவர்கள் இருவரும் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்து வந்துள்ளனர்.

 

இதை போன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீர்காழி அருகே ஆதமங்கலம் கிராமத்தில் ஒரு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி காட்டுப்பகுதியில் மறைத்து வைத்துள்ளனர்.

 

அதை எடுத்துச் சென்று மீண்டும் அங்கு வந்த நிலையில் கிராம மக்கள் இளைஞர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இருவரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon