--- --:--:-- --

விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம்..!

6

நேற்றைய போட்டியும் அப்படிதான் பரபரப்பாக நடைபெற்றது. இதில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபாரமாக வெற்றிபெற்றது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் வீரர் ரிஸ்வான் அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய போது இந்திய ரசிகர்கள் சிலர் ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பினர்.

 

இதேபோல மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சில் அரசியல் கலந்திருந்தது. அதேபோல திருமாவளவன், அன்புமணி ராமதாஸ் என தலைவர்களுக்கு போனில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதும் அவரின் அரசியல் ஆசையை உறுதிப்படுத்துகிறது. ஆனால், விஜய் அரசியலுக்கு வருவது குறித்து அவர் மட்டும்தான் பதில் சொல்ல முடியும் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துவிட்டார்.

 

 

இந்த நிலையில் விஜய்யின் லியோ திரைப்படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய்யின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட நிலையில் அரசியல் அழுத்தம் காரணமாகவே ரத்து செய்யப்பட்டதாக சீமான் உள்ளிட்டோர் தமிழக அரசை விமர்சித்தனர்.

 

அதனைத் தொடர்ந்து லியோ சிறப்புக் காட்சிகள் திரையிடுவதிலும் சிக்கல் எழுந்தது. ஒருவழியாக சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சிறப்பு காட்சி விதிமுறைகளை மீறும் தியேட்டர்களை கண்காணிக்க குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் லியோ பட விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக அதிமுக குரலெழுப்பியுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் செய்தித் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நடிகர் விஜய்யை கண்டு திராவிட முன்னேற்ற கழகம் அஞ்சுகிறது. திரைத் துறையில் எந்த நடிகர்களாக இருந்தாலும் அரசு ஏற்றத்தாழ்வுகளை பார்க்கக் கூடாது. அதிமுக ஆட்சியில் முன்னணி நடிகர்களின் படம் வரும்போது எந்த பாரபட்சமும் பார்க்காமல் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கொடுத்திருந்தோம்” என்று கூறினார்.

தற்போது சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி தந்த பின்னர் குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதிப்பது சரியானது அல்ல என்று தெரிவித்த அவர், “கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் திரைப்படங்கள் பாரபட்சம் இல்லாமல் திரையிடப்பட்டது.

 

ஆனால் தற்போது 200க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படாத நிலை தான் உள்ளது. திரைத் துறை தற்போது முடங்கியுள்ளதாக திரைத் துறையினர் கூறுகின்றனர். இதற்குக் காரணம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற தனி நிறுவனத்தின் ஆதிக்கம் தான்” என்று குற்றம்சாட்டினார்.

Right Menu Icon