காசாவில் இணைய சேவையும் முடக்கியது இஸ்ரேல்..!
காஸா பகுதியில் இஸ்ரேலில் ராணுவம் இணைய சேவையை முடக்கியதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் அரசு ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக காசா மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் காசாவில் இஸ்ரேல் ராணுவம் இணைய சேவையை முடக்கியது. தொலைதொடர்பு கருவிகளை அழிப்பதால் 20 லட்சம் பேர் இணைய சேவையின்றி தவிர்த்து வருகின்றனர்.
அப்பாவி மக்களை வெளியேறவிடாமல் ஹமாஸ் அமைப்பினர் தடுப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





