சந்திரபாபுவின் உடல்நிலை மோசமாகி விட்டதாக மனைவி குற்றச்சாட்டு..!
சிறையில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலை மோசமாக உள்ளதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜ மந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி தனது கணவரின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
அவருக்கு தேவையான மருத்துவ உதவி ஆந்திரா அரசு வழங்க தவறிவிட்டது என்றும் அவர் ஏற்கனவே 5 கிலோ எடை குறைந்துவிட்டார் எனவும் கூறுகிறார்.
மேலும் உடல் எடை குறைந்தால் அவரது சிறுநீரகங்கள் கடுமையாக பாதிக்கப்படலாம் எனவும் அவரது மனைவி கவலை தெரிவித்துள்ளார். சிறைச்சாலையின் நீர் தீர்க்க தொட்டிகள் சுகாதாரமற்றவையாக உள்ளன எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





