--- --:--:-- --

நவம்பர் 1ம் தேதியிலிருந்து டெபிட் கார்டு, ஏடிஎம் கார்டுகள் செல்லாது..!

8

ங்கிக்கு நேரடியாக சென்று மொபைல் எண்ணை பதிவு செய்யாவிட்டால் நவம்பர் முதல் ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பேங்க் ஆப் இந்தியா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

 

அதாவது வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு, ஏடிஎம் கார்டுகள் நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் கட்டாயம் மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும்.

 

இதனை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் செய்ய தவறினால் நவம்பர் 1லிருந்து பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் தொடர்பான அனைத்து சேவைகளையும் வாடிக்கையாளர்கள் பெற விரும்பினால் கட்டாயமாக மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும்.

 

இதனால் வங்கிகளில் நேரடியாக சென்று மொபைல் எண்ணை மாற்றுவதற்கான படிவத்தை நிரப்பி பாஸ்புக் மற்றும் ஆதார் கார்டு நகல்களை ஒப்படைக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

 

Right Menu Icon