--- --:--:-- --

குளச்சல் பகுதியில் வீடு இடிந்து விபத்து..!

5

ன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையில் 46 வீடுகள் சரிந்துள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த மழையின் காரணமாக பல பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகின.

 

குறிப்பாக பூதப்பாண்டி சுற்றுவட்டார பகுதிகளில் குளங்கள் நிரம்பி உடைப்பு ஏற்பட்டு வயல்களில் தண்ணீர் தேங்கியது. ராஜகமங்கலம் பகுதியில் வீடுகளில் நீர் புகுந்து தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. தற்போது மழை குறைந்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

 

இந்நிலையில் தொடர் மழையால் மாவட்டத்தில் இரண்டு வீடுகள் முழுமையாகவும் 44 வீடுகள் பகுதியாகவும் இடிந்து சேதமாகியுள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon