அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்தவர் கைது..!
ஈரோடு அருகே அரசுப்பணி வாங்கி தருவதாக கூறி 5 பேரிடம் 10 லட்சம் வரை மோசடி செய்த சர்க்கரை வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.
நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் சர்க்கரை வியாபாரம் செய்து வந்த பாலமுருகன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனக்கு அதிகாரிகளை தெரியும் என்றும் இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தால் அரசு ஓட்டுநர் பணியை தன்னால் வாங்கி தர இயலும் என செல்வராஜிடம் நண்பர்களோடு சேர்ந்து ஆளுக்கு இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்கள்.
ஒரு மாதத்திற்கு பிறகு தங்களுக்கு கிடைத்த பணி நியமன கடிதத்தை அரசு அலுவலகத்தில் காண்பித்த போது போலியானது என்று அவர்கள் தெரிவித்தனர். தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள் பாலமுருகனிடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர்.
பாலமுருகன் காலம் தாழ்த்தி வந்ததையடுத்து செல்வராஜ் மற்றும் அவரது நண்பர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாலமுருகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.






