ரூ.156 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு..!
திருநெல்வேலியில் நடைபெற்ற கடனுதவி வழங்கும் விழாவில் 6,500 பயனாளிகளுக்கு 156 கோடி ரூபாய்க்கான கடன் உதவியை நிதி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாபெரும் கடன் உதவி வழங்கும் முகாம் நடத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு 156 கோடி ரூபாய் கடன் உதவியை 6,500 பயனாளிகளுக்கு வழங்கினார்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். அப்போது அவருக்கு நரிக்குறவர் பெண் ஒருவர் பாசிமணி மாலையும் அணிவித்தார்.






