--- --:--:-- --

ஆதார் எண் கட்டாயம் இல்லை.. உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்..!

5

புதிய வாக்காளர் அட்டையை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்படாது என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

 

தெலுங்கானாவை சேர்ந்த நிரஞ்சன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் வாக்காளர் அடையாள அட்டையை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தில் ஆதார் எண் கட்டாயம் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டி உள்ளார்.

 

மேலும் வாக்காளர் பதிவு சட்டம் 2020 இரண்டின் படி ஆதார் எண் கட்டாயம் கிடையாது என்பதால் இந்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

 

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆதார் எண்ணை கட்டாயம் வழங்க வேண்டும் என தெரிவித்தார். விண்ணப்ப படிவங்களின் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon