ரூ.1,000 உரிமை தொகை பெறாத பெண்களுக்கு வந்த அதிர்ச்சி தகவல்..!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை அறிந்து கொள்ள அறிமுகம் செய்யப்பட்ட இணைய தளம் இரண்டாவது நாளாக முடங்கியதால் மக்கள் அவதி அடைந்தனர்.
கலைஞர் மகளிர் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு 56.50 லட்சம் மக்கள் அதற்கான காரணத்தை அறிந்து கொள்ள புதிய இணையதளத்தை தமிழக அரசு வெளியிட்டது. விண்ணப்பம் ஏற்கப்படாததற்கான காரணத்தை அறிந்து கொள்ளும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டது.
நேற்று இணையதளத்தை ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தியதால் முடங்கிய நிலையில் அதிகாரிகள் இணையதளத்தை செயல்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த நிலையில் இரண்டாவது நாளாக இணையதளம் முடங்கியுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.






