பிராங்க் வீடியோ எடுத்த இளைஞர்களை கைது செய்த போலீசார்..!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கரை பகுதியில் இரு வாலிபர்கள் பிராங்க் வீடியோ என்ற பெயரில் முகமூடி அணிந்து கொண்டு பள்ளி மாணவிகளையும் பெண்களையும் பயமுறுத்தும் வகையில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.
இது தொடர்பாக மக்கள் அளித்த புகாரையடுத்து இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.






