மது அருந்திவிட்டு இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த காவலர்கள்..!
சிவகங்கை பேருந்து நிலையம் அருகே காவலர்கள் இருவர் மது போதையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. பேருந்து நிலையம் அருகே அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.
காவலர் சீருடைகள் வந்த இருவர் மது பாட்டில்களை வாங்கி கடைக்குள் சென்று மது அருந்துகின்றனர். தொடர்ந்து வெளியே வந்த காவலர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் ஏறி சென்றனர்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவலர் சீருடையில் கடைக்குள் சென்று மது அருந்திவிட்டு இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை கைபேசி மூலமாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.






