பூக்கடையை அகற்ற வந்த அதிகாரிகள்..கிரேன் மீது ஏறி பெண் செய்த செயல்..!
செங்கல்பட்டு அருகே உள்ள பூக்கடையை அகற்ற வந்த கிரேன் மீது பெண் ஒருவர் ஏறி கடையை அகற்றக்கூடாது என கூச்சலிட்டார். செங்கல்பட்டு மாவட்டம் புதுப்புபட்டினம் பேருந்து நிறுத்தம் மற்றும் பக்கிங் கால்வாயில் கரையோரம் இடங்களில் கடந்த சில வருடங்களாக காய்கறி, கடை, பூக்கடை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு உள்ளான நிலையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பல நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து அங்கு வருகை புரிந்த கிராம நிர்வாக அலுவலர் வருவாய்த்துறை அலுவலர் ஆகியோர் அங்கு இருப்பவர்களிடம் கடையை அகற்றக் கேட்டுக் கொண்ட நிலையில் பெண் மட்டும் வருத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தடையை அகற்ற வந்த கிரேன் மீது அவர் ஏறி கூச்சலிட்டார். அவரை அங்கிருந்து அப்புறப்படுத்திய காவல்துறையினர் அங்க பகுதிகளுக்கு வந்த 30-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினார். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





