ஒரே பகுதியில் இயங்கும் 2 டாஸ்மாக் கடைகள் மக்கள் புகார்..!
திருப்பூர் நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் அமைந்துள்ள இரண்டு மதுபான கடைகளால் பல்வேறு இடர் ஏற்படுவதாக அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். நொச்சிபாளையம் பிரிவில் இரண்டு பகுதிகளிலும் மதுபான கடைகள் அமைந்துள்ளன.
மதுபோதையில் செல்லும் நபர்களால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுவதாகவும் அந்த பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில் உள்ள மதுபான கடைகளை அகற்றினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





