டெல்லி மதுபான கொள்கை வழக்கு கவிதாவுக்கு மீண்டும் சம்மன்..!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரன் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லியில் 2023 – 22 நிதியாண்டில் அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது.
அந்த மதுபான கொள்கை தொழிலதிபர்களுக்கு சாதகமாக அமைந்ததாகவும் அதன் மூலம் 100 கோடி ரூபாய் வரை கட்சியினர் லஞ்சம் பெற்றதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அந்த கொள்கையை டெல்லி அரசு திரும்ப பெற்றது.
இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்க துறையினர் தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி துணை முதல்வராக இருந்த மனிஷ் சிசோடியா இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே இந்த வழக்கு விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாகத் துறை அலுவலகத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும் பாரதி ராஜ்யசமதியின் எம்எல்ஏவும் கவிதா கடந்த மார்ச் மாதம் ஆஜரானார்.
கவிதாவுக்கு மீண்டும் அமலாக்க துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். கவிதா மீதான வழக்கு அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது என பாரதிய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.





