சனாதனத்தை ஒழிப்பதே இந்தியா கூட்டணியின் நோக்கம் : மோடி
சனாதன தர்மத்தை ஒழிப்பதே இந்தியா கூட்டணி நோக்கம் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின் பேசிய பிரதமர் மோடி இந்தியாவின் கலாச்சாரத்தை காக்க ஒரு மறைமுக செயல் திட்டத்துடன் எதிர்க்கட்சிகள் களமிறங்கியுள்ளதாக தெரிவித்தார்.
சனாதனம் மீதான தாக்குதல், இந்திய கலாச்சாரம் மீதான தாக்குதல் என தெரிவித்த பிரதமர் யார் எவ்வளவு தாக்கினாலும் சனாதனம் உயர்ந்து கொண்டே செலவினை தெரிவித்தார்.





