கனடா பிரதமர் செல்ல வேண்டிய விமானத்தில் இயந்திர கோளாறு.. டெல்லியில் திடீர் பரபரப்பு..!
ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ரோடு புறப்பட்டு செல்ல வேண்டிய விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. டெல்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க கர்நாடகாவின் வந்துள்ளார்.
மாநாடு நிறைவடைந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புறப்பட வேண்டிய விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. 8 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டது.
இது தொடர்பாக கனடா பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கனடா பிரதமர் செல்ல வேண்டிய விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும் இதை ஒரே நாள் இரவில் சரி செய்து விட முடியாது என்பதால் மாற்று ஏற்பாடு வரும் வரையில் பிரதமர் குழுவினர் இந்தியாவில் இருப்பார்கள் என தெரிவித்துள்ளது.






