தியாகி இமானுவேல் சேகரனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம்..!
தியாகி இமானுவேல் சேகரனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.






