உயிருடன் இருக்கும் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த கணவன்..!
பெத்தால பள்ளியை சேர்ந்தவர் சேதுராம். இவரது மனைவி சுகன்யா ஆடிட்டராக உள்ளனர். கணவன் – மனைவி இடையே குடும்பப் பிரச்சினை இருந்து வந்தது. இதனால் சுகன்யா கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் கிருஷ்ணகிரி வீரப்பன் நகர் பகுதிக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சென்று வந்துள்ளார்.
கணவன் மனைவி இடையே விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 4ம் தேதி கிருஷ்ணகிரி நகர் பகுதியிலும், வேறு சில இடங்களிலும் சுகன்யா இறந்துவிட்டதாக பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதனை கண்ட சுகன்யா அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக சுகன்யா கிருஷ்ணகிரி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில் முன் விரோதம் காரணமாக தான் இறந்ததாக கணவர் பேனர் வைத்துள்ளதாக கூறியுள்ளார். அந்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி நகர் காவல் துறையினர் கணவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






