ரகளையில் இறங்கிய திமுக கவுன்சிலர் வீட்டை அடித்து நொறுக்கும் பரபரப்பு காட்சி..!
ஈரோட்டில் அடியாட்களுடன் வந்து வீட்டின் கதவை உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக சிசிடிவி காட்சிகளுடன் திமுக கவுன்சிலர் மீது பெண் புகார் அளித்துள்ளார். ஈரோடு பிருந்தா வீதியைச் சேர்ந்த சுப ரஞ்சனா என்ற பெண்ணுக்கு அவரது தந்தை தனது பூர்வீக வீட்டை எழுதி வைத்துள்ளார்.
இந்த வீட்டை சுப ரஞ்சனா தனது கணவர் பெயர்க்கு மாற்றம் செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப ரஞ்சனாவின் சகோதரர் அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அருண்குமார் தனது உறவினரும் மாநகராட்சி 36-வது வார்டு திமுக கவுன்சிலருமான பழனியப்பா சேர்ந்து வீட்டின் பூட்டை உடைத்து உடைமைகளை எடுத்து வெளியே போட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.





