பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவனை வெளுத்து வாங்கிய மக்கள்..!
சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படும் போதை ஆசாமியை அந்த பகுதி மக்கள் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மந்தைவெளியில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த சிறுமிகள் சிலர் திடீரென சத்தமிட்டு அழ தொடங்கினர்.
அந்த பகுதி மக்கள் காரணம் கேட்ட பொழுது போதை ஆசாமி ஒருவர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறியுள்ளனர். உடனே அங்கிருந்து ஓட்டம் பிடித்த போது சாமியை மக்கள் விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.





