திருவாரூரில் குறுவைப் பயிர்களை ஆய்வு செய்யும் வேளாண் துறை அதிகாரிகள்..!
திருவாரூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவைப் பயிர்கள் நிலையை அறிய வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார்கள். வேளாண்மை துறை ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில் ஆய்வு நடைபெற்று வருகிறது.
மாவட்டம் முழுவதும் பல இடங்களில் வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ள குறுவைப் பயிர்களை காக்க மாற்று வழி உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
வட்டார நீர் ஆதாரங்கள் மூலம் பயிர்களை பாதுகாப்பதற்கான சாத்திய கூறுகளை வேளாண் துறை ஆராயும் என தெரிவித்துள்ளது. ஆழ்துளைக்கிணறு வைத்துள்ள விவசாயிகள் உதவியுடன் அனைத்து பயிர்களையும் காக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.





