ஒரே வீட்டில் இருந்த ஆண், பெண் மொட்டை அடித்து ஊர்வலம்..!
ஆந்திர மாநிலம் சத்தியசாய் அருகே திருமணம் கடந்த உறவிலிருந்து ஜோடிக்கு மொட்டை அடித்து உறவினர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள இந்துபுரம் கிராமத்தில் இந்த கொடுமையான சம்பவம் அரங்கேறி உள்ளது.
சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஆண் ஒருவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். அவருக்கும் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இதனை அவமானமாக கருதி உறவினர்கள் இருவருக்கும் அரைகுறை மொட்டை அடித்து ஊர்வலமாக அழைத்து சென்று தண்டனை அளித்தனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த இந்துபுரம் போலீசார் தலைமறைவாக உள்ள உறவினர்களை தேடி வருகின்றனர்.






