திடீரென ராஷ்மிகா காலில் விழுந்த திருமண ஜோடி!
நடிகை ராஷ்மிகா தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கிறார். பல டாப் ஹீரோ படங்களில் நடித்து வரும் அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
ராஷ்மிகா தற்போது புஷ்பா 2 உள்ளிட்ட பல படங்களில் தற்போது நடித்து வருகிறார்.ராஷ்மிகா சமீபத்தில் அவரது அசிஸ்டன்ட் திருமணத்தில் கலந்துகொண்டார். அப்போது திருமண ஜோடி திடீரென ராஷ்மிகா காலில் விழுந்துவிட்டனர்.
அதை சற்றும் எதிர்பார்க்காத ராஷ்மிகா ஷாக் ஆகி அவர்களை ஆசீர்வாதம் செய்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




