--- --:--:-- --

மூத்த மகன் செய்த செயல்..போலீஸ் எடுத்த அதிரடி முடிவு..!

9

சென்னை மடிப்பாக்கத்தில் வயதான தம்பதியின் வீட்டிற்கு சென்று அவர்களது மகனிடம் இருந்த சொத்து ஆவணங்களை போலீசார் பெற்று பெற்றோரிடம் வழங்கினார்.

 

சென்னை மடிப்பாக்கம் பகுதியில் பார்த்தசாரதி என்பவர் 6,000 சதுர அடி நிலத்தை தனது மனைவி வள்ளியம்மாள் பெயரை வைத்துக்கொண்டு மீதம் உள்ள சொத்துக்களை மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகளுக்கு பங்கிட்டு கொடுத்துள்ளார்.

 

வள்ளியம்மாள் மருத்துவ செலவிற்கு மாதம் தோறும் அதிக பணம் தேவைப்படுவதால் அவரது பெயரில் உள்ள இடத்தை விற்க முடிவு செய்துள்ளார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூத்த மகன் மகேந்திரன் நிலத்தின் ஆவணங்களை எடுத்துக்கொண்டு சென்றார்.

 

பலமுறை கேட்டும் கொடுக்காததால் காவல் ஆணையரிடம் கடந்த 23ஆம் தேதி பார்த்தசாரதி புகார் அளித்திருந்தார். இதையடுத்து மடிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். மூத்த மகன் மகேந்திரனிடமும் விசாரணை நடத்தி ஆவணங்களை ஒப்படைக்க வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon