மின்சாரம் தாக்கிய கணவரை காப்பாற்ற உயிரைவிட்ட மனைவி..!
திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கிய கணவரை காப்பாற்றி சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மீனாட்சிபுரத்தை சேர்ந்த பாண்டி புதிதாக கட்டி வரும் வீட்டு சுவரில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்கிருந்த மின்கம்பியில் மின்கசிவு ஏற்பட்ட நிலையில் பாண்டி மீது மின்சாரம் பாய்ந்ததால் அலறினார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி உதயசூரியா காப்பாற்ற முயன்றார். அப்பொழுது மின்சாரம் பாய்ந்ததில் உதயசூரியன் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பாண்டி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.






