பயணியின் கைவிரலை கடித்து துப்பிய ஆட்டோ ஓட்டுனர்..!
சென்னையில் பயணிகளின் கைவிரலை கடித்து துப்பிய ஆட்டோ ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்தனர். பணி முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
ஆட்டோவில் பயணம் செய்த ராமசுந்தர் சில செயல்களை ஆட்டோ ஓட்டுனர் சந்தானம் என்பவர் கண்டித்து இருந்தார். இதற்கிடையே இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
அவரின் கைவிரலை ஆட்டோ ஓட்டுனர் கடித்து துப்பியுள்ளார். இது தொடர்பான புகாரில் ஆட்டோ ஓட்டுனர் சந்தனத்தை காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவரின் கைவிரலை ஒட்ட வைக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.






