தமிழ் எழுத்துக்களால் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை விரைவில் திறப்பு..!
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மீடியா டவர். திருவள்ளுவர் சிலை அமைக்கும் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதாக மத்திய நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளது.
குறிச்சி ரவுண்டானாவில் 20 அடி உயரத்திற்கு தமிழ் எழுத்துக்களால் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இரவில் வர்ண விளக்குகளால் ஜொலிக்கும் வகையிலும் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்ட முதல் சிலை என்ற பெயரில் விரைவில் திறக்கப்பட உள்ளது. அதே போல மீடியா டவரும் தமிழ் அடையாளங்களில் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது.






