--- --:--:-- --

குடியரசுத் தலைவர் விருது பெரும் காவலர்கள் யார் யார்..?

3

சுதந்திர தினத்தை ஒட்டி காவல்துறையினருக்கு வழங்கப்படும் குடியரசு தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் காவல்துறையில் தனி சிறப்புடன் செயலாற்றும் அதிகாரிகளுக்கு அவர்களது செயல்பாடுகள் சாதனைகள் அடிப்படையில் குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்படுகிறது.

 

காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் ஐஜி பவானிஸ்வரிக்கு இந்தாண்டிற்கான காவல்துறை தகைசால் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிகளுக்கான விருதுகள் 19 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை காவல்துறை துணை ஆணையர் அரவிந்த் தர்மபுரி காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டீபன், ராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை, சென்னை மகளிர் காவல்துறை கண்காணிப்பாளர் செண்பகவல்லி உள்ளிட்ட 19 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon