முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்த தக்காளி கூழ் வாகனம்
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அம்மா பெட்ரோல் என்ற பெயரில் நான்கு துறைகளுக்கான திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். அம்மா பெட்ரோல் என்ற பெயரில் புதிய ரோந்து வாகனத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக தலைமைச் செயலகத்தில் 40 ரோந்து வாகனங்களை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இதையடுத்து போக்குவரத்து காவல்துறையினரின் சீருடையில் பொருத்துவதற்கான கண்காணிப்பு கேமராக்களை முதலமைச்சர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து தக்காளியை கூழாக்கி இயந்திரம் கொண்ட பிரத்தியேக வாகனத்தை முதல்வர் அறிமுகம் செய்தார். பின்னர் தமிழகத்தில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட குளிர்சாதன வசதி கொண்ட பேட்டரி பேருந்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மின்கல பேருந்து ஒன்றில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பயணம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் .விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




