--- --:--:-- --

76 வது சுதந்திர தின கொண்டாட்டம்.. நாளை முதல் கொடியேற்ற நாட்டு மக்களுக்கு பிரதமர் அழைப்பு..!

4

நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாளை முதல் 15ஆம் தேதி வரை இல்லம் தோறும் மூவர்ண கொடியை ஏற்றி வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 

நாடு முழுவதும் சுதந்திர தினத்தை போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தேச ஒற்றுமை சுதந்திரத்தின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் மூவர்ண கொடியை ஏற்றி வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

 

நாளை முதல் சுதந்திர தினம் வரை மூவர்ண கொடியை ஏற்றி வைத்து அதன் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிடுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon