போட்டி போட்டு கொண்டு வந்த தனியார் பேருந்து மோதி விபத்து..!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து மோதியதில் மூன்று சிறுமிகள் உட்பட எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். நேற்று மாலை திருப்பூரிலிருந்து கோவைக்கு இரண்டு தனியார் பேருந்துகள் அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தன.
பல்லடம் அருகே வந்த பொழுது இரண்டு பேருந்துகளும் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முயன்றன. பல்லடம் பேருந்து நிலையம் அருகே வந்த பொழுது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து முன்னே சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் கார் மீது மோதியது.
இந்த விபத்தில் எட்டு பேர் படுகாயம் அடைந்த நிலையில் பொதுமக்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





