அலிபுரி மலை பாதையில் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழப்பு..!
திருப்பதி அலிபுரி மலை பாதையில் சிறுத்தை தாக்கியதில் ஆறு வயது சிறுமி உயிரிழந்துள்ளார். திருப்பதி கோயிலுக்கு குடும்பத்தினர் உடன் சென்ற பொழுது இந்த சோகம் ஏற்பட்டுள்ளது. லட்சுமி நரசிம்ம சாமி கோயில் அருகே சிறுமி சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.
சிறுத்தை தாக்கி சிறுமி உயிர் இழந்ததால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். பக்தர்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





