கிரிவலப் பாதையில் அசைவ உணவகங்கள்.. ஆளுநர் வருத்தம்..!
அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கிரிவல பாதையில் அசைவ உணவகம் இருப்பதை கண்டு வருத்தம் அடைந்ததாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை சுற்றுப்பயணம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஆளுநர் ரவி பயணத்தின் பொழுது தன்னை சந்தித்த மாணவர்கள், இயற்கை விவசாயிகள், பழங்குடியினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அவர்களின் எதிர்பார்ப்புகள் கவலைகள் பற்றி பகிர்ந்து கொண்டதாக கூறியுள்ளார்.
அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கிரிவலப் பாதையில் கோயில் சாலை வசதி இல்லாததை அறிந்தும் அசைவ உணவு விற்கும் உணவகத்தில் இருப்பதை கண்டு வருத்தம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பக்தர்களும் தங்களது மன வேதனையை பகிர்ந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ள ஆளுநர் உணவு என்பது முழுக்க முழுக்க ஒருவரது தனிப்பட்ட விருப்பம் எனவும் கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் அருணாச்சலேஸ்வரர் கோடி கணக்கான பக்தர்களின் உணவுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





