250 மில்லிக்கு பதிலாக 500 மில்லி என அச்சிட்டு விநியோகிக்கப்படும் ஆவின் பால்..!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனைக்கு வரும் ஆவின் பாலின் அளவு 250 மில்லிக்கு பதிலாக 500 என அச்சிடப்பட்டு வருவதால் பொதுமக்கள் குழப்பம் அடைகின்றனர்.
ஆவின் நிறுவனத்தின் பதப்படுத்தப்பட்ட பால் பல்வேறு நிறுவனங்களில் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் சாத்தான்குளம் பகுதிக்கு வரும் ஆவின் பால் அளவு தவறாக அச்சிடப்பட்டு வழங்கப்படுவதை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





