காதல் தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்து பொம்மையை திருமணம் செய்த நபர்..!
காதல் தோல்வி அடைந்த விரக்தியில் கொலம்பியாவே சேர்ந்த இளைஞர் பொம்மையை திருமணம் செய்து இணையவாசிகளை விழி பிதுங்க வைத்துள்ளார். கொலம்பியாவை சேர்ந்தவர் கிறிஸ்டியன் மாண்டெக்ரோ.
இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காதல் முடிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் காதலி தன்னை விட்டு சென்ற விரக்தியில் அந்த இளைஞர் பொம்மையை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
மூன்று பொம்மை குழந்தைகளுக்கு தந்தையானவர் தனது பொம்மை. மனைவி மற்றும் குழந்தைகளை பொது இடங்களுக்கு அழைத்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையவாசிகளிடையே கவனத்தை பெற்றுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





