திமுக நிர்வாகி வீட்டில் 18 மணி நேரம் சோதனை நிறைவு..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் திமுக ஒன்றிய செயலாளர் வீராசாமிநாதர் வீட்டின் அமலாக்க துறையினர் 18 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர். திமுக தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீராசாமிநாதன்.
இவர் பழனி அருகே உள்ள புஷ்பத்தூரில் சிபிஎஸ்இ பள்ளி நடத்தி வருவதோடு தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் நிதி நிறுவனமும் நடத்தி வருகிறார். தொழிலதிபராகும் சாமிநாதன் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றைய தினம் அவரது வீட்டிற்கு சென்ற பதினைந்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து வேடசந்தூர் கொங்கு நகரில் உள்ள சாமிநாதன் வீட்டில் மாலை வரை சோதனை நடத்தினர்.
பின்னர் அவரது தோட்டத்து வீட்டில் 18 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் நடைபெற்றது. முன்னதாக தோட்டத்து வீட்டு முன்பு 30க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.






